Sunday, September 8, 2024
Google search engine
Homeஇந்தியாஇரண்டு நாள் பயணமாகப் பிரதமர் மோடி சிங்கப்பூர் வந்தடைந்தார்

இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் மோடி சிங்கப்பூர் வந்தடைந்தார்

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வந்துள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது கடந்த 2018க்குப் பிறகு ஐந்தாவது முறையாகவும், 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாகவும் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார்.

சிங்கப்பூர் லயன் நகரில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் அன்புடன் வரவேற்றார்.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,

இந்தியா-சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சந்திப்புகளை பிரதமர் மோடி நிகழ்த்த உள்ளார். மேலும் வியாழனன்று நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். அதன்பின்னர், பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்தைச் சந்திக்கிறார்.

மேலும் பிரதமர் வோங் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் இருவரும் அளிக்கும் விருந்துகளில் மோடி கலந்துகொள்கிறார். மூத்த அமைச்சர் லீ சியென் லூங் மற்றும் எமரிட்டஸ் மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோரையும் மோடி சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் முக்கியத்துவமாக இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் சிங்கப்பூரில் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments