தனது அசாத்தியமான நடிப்பினால் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில விருதுகள் என பல்வேறு திரைப்படங்களுக்காக விருதுகளை வாங்கியுள்ளார்.
தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் படங்களிலும் தெலுங்கில் புஷ்பா படத்திலும் நடித்து தென்னிந்திய அளவில் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.
தற்போது மலையாள படமொன்றிலும் புஷ்பா 2 உள்பட 2 தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாவிருக்கிறார்.
சில மாதங்களாக தீவிர உரையாடலில் ஈடுபட்டு வந்த இம்தியாஸ் அலியும் ஃபகத் ஃபாசிலும் தற்போது இணைந்து பணியாற்ற நல்ல கதை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராக்ஸ்டார், ஹைவே, தமாஸா ஆகிய வெற்றிப் பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் இம்தியாஸ் அலி.
தனது வித்தியாசமான கதை சொல்லல் பாணிக்காக கவனம் பெற்ற இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் கடைசியாக வெளியான அமர் சிங் சமிகா படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கும் இம்தியாஸ் அலி, அனுராக் காஷ்யப் இயக்கிய பிளாக் ஃபிரைடே படத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.