‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர்களான டெய்லர் பிரிட்ஸ் – பிரான்சிஸ் தியாபோ நேருக்கு நேர் மல்லுக்கட்டினர்.
இருவரும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் நீண்டு கொண்டே சென்றது. முதல் 4 செட்டுகளில் இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற 5-வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிரிட்ஸ் இந்த போட்டியில் 4-6 ,7-5, 4-6, 6-4 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இவர் இறுதிப்போட்டியில் ஜானிக் சினெர் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.