Thursday, September 19, 2024
Google search engine
Homeசினிமாவேட்டையன் படத்தின் "ஹண்டர் வண்டார்" பாடல் - சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த அனிருத்

வேட்டையன் படத்தின் “ஹண்டர் வண்டார்” பாடல் – சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த அனிருத்

ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ” சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் பாடலைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இது குறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என்று குறிப்பிட்டு, பாடலின் ப்ரோமோ வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வேட்டையன் படத்தில் நடிகர் பகத் பாசில் பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தனி வீடியோ வெளியிட்டு தெரிவித்து உள்ளது.

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments