கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்டு பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 பந்துகளையும் சிக்சர்களாக விளாசி அசத்தியிருந்தார்.
அவரது அந்த அதிரடியான சிக்சர்கள் இன்றளவும் பெருமளவில் ரசிகர்கள் மறக்காமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த போட்டியின்போது தான் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த பின் தோனி தன்னிடம் என்ன கூறினார்? என்பது குறித்து பல்வேறு தகவல்களை தற்போது யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்: நான் ஆறாவது சிக்சரை அடித்ததும் தோனியின் என்னிடம் வந்து, ‘நீங்கள் எப்பொழுதெல்லாம் எனக்கு பின்னால் பேட்டிங் செய்ய வந்தாலும் அப்போதெல்லாம் உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் இரண்டு மடங்காக இருக்கிறது. நன்றாக விளையாடுகிறீர்கள்’ என்று தோனி தன்னிடம் கூறியதாக யுவராஜ் சிங் கூறியுள்ளார்.