Sunday, December 22, 2024
Google search engine
Homeசினிமாபயங்கரமான Playboy-யின் காவிய காதல் - `காதலே காதலே' படத்தின் டீசர்

பயங்கரமான Playboy-யின் காவிய காதல் – `காதலே காதலே’ படத்தின் டீசர்

மங்காத்தா திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் மஹத் ராகவேந்திரா . அதைத் தொடர்ந்து ஜில்லா படத்தில் நடித்தார்.

2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் XL இந்தி திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

கடைசியாக மாருதி நகர் போலிஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்து இருந்தார். தற்பொழுது மகத் அடுத்ததாக `காதலே காதலே’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல இயக்குனரான கே.வி ஆனந்தின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் பொழுது போக்கு அம்சத்துடன் இக்காலத்து இளைஞர்களின் காதலையும் அவர்கள் ஒரு உறவை எப்படி அணுகுகிறார்கள் என்பதை குறித்த படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார். மஹத்துடன் இணைந்து பாரதிராஜா, விடிவி கணேஷ், ரவீனா, புகழ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். `காதலே காதலே’ படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க ஸ்ரீ வாரி பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. மஹத் இதில் ஒரு ப்ளே பாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவர் மீனாட்சியை உண்மையாக காதல் செய்கிறார். இவர்களின் காதலை மையப்படுத்திய காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தில் பாடலின் உரிமையை சரிகமா நிறுவனம் வாங்கியுள்ளது. திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments