45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் 10-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, அமெரிக்காவைச் சந்தித்தது.இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இறுதியில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 – 1.5 புள்ளிக்கணக்கில் வென்றது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்றுள்ளது.11 சுற்றுகள் கொண்ட 10 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மீதமுள்ள ஒரு போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி தங்கம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.