Sunday, December 22, 2024
Google search engine
Homeசினிமாபுஷ்பா 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

புஷ்பா 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.

நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பா – 2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் உள்ள நிலையில் அதனை குறிப்பிட்டு புஷ்பா 2 படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments