மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம்.
சென்னையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிவடைந்து படம் வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியுள்ளார். இதில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தின் டிரைலர் குறித்து தற்பொழுது படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது. படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.