தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: தே.மு.தி.க. பொருளாளராக அனைவரையும் ஒருங்கிணைத்து பணியாற்றி வந்த பிரேமலதா விஜயகாந்த் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது இயக்கப்பணியும், மக்கள் பணியும் சிறக்க தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மனதார வாழ்த்துகிறேன்.
புதிய நீதிக் கட்சிதலைவர் ஏ.சி.சண்முகம்: பிரேமலதா சிறந்த பேச்சாற்றல் மிக்கவர். தே.மு.தி.க. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து இந்த கூட்டணி வெற்றிபெற பங்காற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். புதிய நீதிக் கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்: சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.