இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில்”முகுந்தன்” என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான ஹே மின்னலே இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்பொழுது சாய் பல்லவி கதாப்பாத்திரத்தின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சாய் பல்லவி படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் துறுதுறுவென சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவியின் ஜோடி பார்க்கவே மிகவும் கியூட்டாக உள்ளது.
மேஜர் முகுந்தனின் மனைவியும் இந்த காட்சியில் இடம்பெற்றுள்ளார். சாய் பல்லவியின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமரன் படத்தை குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.