கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு உடையாம்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றினார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் நெருங்கி பழகி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவியை ஆசிரியை சவுந்தர்யா வெளியே அழைத்து சென்று உள்ளார். அப்போது அந்த மாணவிக்கு ஆசிரியை சவுந்தர்யா பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி உள்ளார். அதைக்கேட்ட மாணவியின் பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் ஆசிரியை சவுந்தர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.