Friday, October 18, 2024
Google search engine
Homeவிளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்கள்...4-வது இந்திய வீரராக சாதனை படைத்த விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்கள்…4-வது இந்திய வீரராக சாதனை படைத்த விராட் கோலி

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2வது இன்னிங்சில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா இன்னும் 125 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த போட்டியில் விராட் கோலி 53 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இந்தப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (15,921 ரன்) முதல் இடத்திலும், ராகுல் டிராவிட் (13,265 ரன்) 2வது இடத்திலும், சுனில் கவாஸ்கர் (10,122 ரன்) 3வது இடத்திலும், விராட் கோலி (9,017 ரன்) 4வது இடத்திலும், வி.வி.எஸ் லட்சுமனன் (8,781 ரன்) 5வது இடத்திலும் உள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments