Friday, November 22, 2024
Google search engine
Homeஇந்தியாபாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க கேரள ஐகோர்ட்டு அனுமதி

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க கேரள ஐகோர்ட்டு அனுமதி

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமடைந்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு கருக்கலைப்புக்கு அனுமதிக்குமாறு சிறுமியின் பெற்றோர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஒரு நபர் அமர்வு, கருக்கலைப்புக்கு தடை விதித்தது.

இது தொடர்பான மேல்முறையீட்டு மனு, கேரள ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒரு நபர் அமர்வின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், சிறுமியின் கருவை கலைப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். கரு உருவாகி 26 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு அனுமதிக்கப்படுவதாகவும், சிறுமியின் மனநிலை குறித்த நிபுணர்களின் அறிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமிக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் பலாத்கார வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் கருவின் ரத்த மாதிரிகளை சேகரிக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கருவில் உள்ள குழந்தையை உயிருடன் வெளியே எடுக்க முடிந்தால், உயிரை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறுமி அல்லது அவரது குடும்பத்தினர் பராமரிக்கத் தயாராக இல்லை என்றால், அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரிகள் இந்த மாதிரிகளை தடய அறிவியல் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments