Friday, November 22, 2024
Google search engine
Homeசினிமாஷூட்டிங் எடுக்க வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள்.. சட்ட சிக்கலில் 'டாக்ஸிக்' படக்குழு

ஷூட்டிங் எடுக்க வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள்.. சட்ட சிக்கலில் ‘டாக்ஸிக்’ படக்குழு

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்தவர் கன்னட நடிகர் யாஷ். கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது டாக்ஸிக் [TOXIC] என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகையும் இயக்குனருமான கீத்து மோகன்தாஸ் இயக்கி வருகிறார் . இவர் ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை வைத்து இயக்கிய லையர்ஸ் டைஸ் 2 தேசிய விருதுகளை வென்றது.

இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பூஜை யுடன் தொடங்கப்பட்டது. இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஹிந்துஸ்தான் மெசின் டூல் இடத்தில் நடைபெற்றுள்ளது. இது சாட்டிலைட் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அம்மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே ஆய்வு செய்த நிலையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவத்தார்.

அதன்படி தற்போது டாக்ஸிக் படத்தின் தயாரிப்பாளர்,ஹிந்துஸ்தான் மெசின் டூல் மேலாளர் ஆகியோர் மீது கர்நாடக வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்துவதில் தடை ஏற்பட்டதுடன் படக்குழுவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments