விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தையடுத்த என். ஆர்.பாளையம் காலனியைச் சேர்ந்தவர் கருணா மூர்த்தி. கடலூர் பெரியார் அரசு கல்லுாரியில் பி.ஏ., படித்து வந்தார். அதே கல்லுாரியில் பி. எஸ்சி, படித்து வந்த, பண்ருட்டி அடுத்த பாலூர் காலனியைச் சேர்ந்த சுவேதாவும் கருணாமூர்த்தி காதலித்து கடந்த ஜூலை மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் கருணாமூர்த்தி செங்கல்பட்டில் தங்கி தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது தந்தை பாண்டியனும் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். இதனால் என்.ஆர். பாளையத்தில் உள்ள வீட்டில் மாமியார் ரமணி, மருமகள் சுவேதா இருவரும் வசித்து வந்தனர்.
இதனிடையே கடந்த மாதம் 30-ம் தேதி. தீபாவளிக்கு முதல் நாள் இரவு 10 மணிக்கு ராணி மர்மமான முறையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 31-ம் தேதி இறந்தார். தனது தாய் ராணி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது இளைய மகன் தட்சணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கண்ட மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சுவேதாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சுவேதா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுவேதா, எதிர் வீட்டை சேர்ந்த கள்ளக்காதலன் சதீஷ் குமார்ஆகிய இருவரையும் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சுவேதா போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறி இருந்ததாவது:-
நான் பி.எஸ்சி., பி.எட்., முடித்துள்ளேன். கல்லூரியில் படிக்கும்போதே சில ஆண் நண்பர்களுடன் தவறான பழக்கம் இருந்தது. திருமணத்திற்கு பின், கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எதிர் வீட்டில் வசிக்கும் டிரைவர் சதீஷ் குமாருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மாமியார் ராணி கூலி வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவார். சில நேரங்களில் இரவு வெளியூரில் தங்கி வேலை செய்வார்.
இந்த சமயத்தில் நானும் சதீஷ்குமாரும் உல்லாசமாக இருந்து வந்தோம். சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் நாங்கள் உல்லாசமாக இருந்ததை மாமியார் ராணி நேரில் பார்த்து விட்டார். என்னிடம் கடுமையாக பேசி, தீபாவளிக்கு ஊருக்கு வரும் எனது கணவரிடம் தெரிவிப்பதாக கூறினார். அதை நான், சதீஷ்குமாரிடம் கூறினேன். அவர் பெட்ரோல்ஊற்றி தீ வைத்து எரித்து விடுவோம் என்றார். பெட்ரோல் வாங்க கடந்த 30- ம் தேதி 500 ரூபாய் கொடுத்தார். அந்த பணத் தின் மூலம் 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி வீட்டில் மறைத்து வைத்தேன்.
அன்று மாலை மாமியார் ராணியிடம் நைசாக பேசி வெளியில் அழைத்து சென்றேன். தீபாவளிக்கு துணி எடுத்துக்கொண்டு, ஓட்டலில் பிரைடு ரைஸ் வாங்கிக் கொண்டு இரவு 8 மணிக்கு வீடு திரும்பினோம். தூக்க மாத்திரைகளை பவுடராக்கி பிரைடுரைசில் கலந்து மாமியாருக்கு கொடுத்தேன். சிறிது நேரத்தில் அவர் தூங்கி விட்டார். இரவு 10 மணிக்கு சதீஷ் குமார் வீட்டிற்கு வந்தார். 2லிட்டர் பெட்ரோலை ஒரு பிளாஸ்டிக் மக்கில் ஊற்றி மாமியார் ராணியின் உடல் முழுவதும் ஊற்றினார். நான்தீ வைத்தேன். உடனடியாக சதீஷ்குமாரை அங்கிருந்து அனுப்பிவிட்டேன். ஊர் மக்கள் திரண்டு வந்து மாமியாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சதீஷ்குமாரும் உதவி செய்வதுபோல் உடன் சென்றார். நடந்த சம்பவம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறி நாடகமாடினேன். இவ்வாறு சுவேதா வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் கூறினார்.