Thursday, November 21, 2024
Google search engine
Homeசினிமாவந்து விழுந்த புதிய அறிக்கை - நயன்தாரா மீண்டும் நறுக்!

வந்து விழுந்த புதிய அறிக்கை – நயன்தாரா மீண்டும் நறுக்!

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் வெளியானது.

‘Nayanthara Beyond the Fairy Tale’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், கடந்த 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிட்டது.

இதற்கிடைய தனது கடந்த 2 ஆண்டுகளாக திருமண வீடியோ வெளியாமல் இருக்க தனுஷ் தான் காரணம் என நயன்தாரா பரபரப்பை ஏற்படுத்தினார். நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா அவரைக் குறித்த காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

படம் தற்போது வெளியான நிலையில் NOC வழங்கிய மற்ற தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டுளளார். இதில் தனுஷின் பெயரை அவர் தவிர்த்துள்ளார்.

அந்த அறிக்கையில், நமது Nayanthara Beyond the Fairy Tale’ ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது.

அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments