Friday, November 22, 2024
Google search engine
Homeஉலகம்அதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா

அதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி. 62 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். இவர் மீது அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டை அடுத்து அதானிக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா நிரூபிக்கும் வரை நாங்கள் நிரபராதிதான்” என்று தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அமெரிக்கா நீதிமன்றத்தின் பிடிவாரண்ட்டை தொடர்ந்து இந்தியாவின் அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக ரத்து செய்து அறிவித்துள்ளார். கென்யாவில் 30 ஆண்டுகளுக்கு 736 மில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி ஒப்பந்தங்களை கவுதம் அதானியின் குழுமம் பெற்றிருந்த நிலையில் அனைத்தையும் ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.

லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கியதால் அதானியின் 2 திட்டங்களான மின் பகிர்மானம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து செய்துள்ளது. அதானி குழுமத்தின் முன்மொழிவை அரசாரங்கம் பரிசீலித்து வருவதாக கென்ய அதிபர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments