மத்தியப் பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, தனது ஆண் நண்பருடன் (21வயது) கோவிலுக்கு சென்றார். கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்த வனப்பகுதிக்குள் இருவரும் நுழைந்தனர். அதே பகுதியில், லாரி பழுதடைந்ததன் காரணமாக, டிரைவர் உட்பட 3 பேர் அங்கு நின்றுக்கொண்டிருந்தனர். இவர்கள், வனப்பகுதிக்குள் சென்ற சிறுமி மற்றும் அவரது நண்பரை பின் தொடர்ந்து சென்றனர்.
அப்போது சிறுமியின் நண்பரை லாரி டிரைவர் உட்பட 3 பேரும் தாக்கியதுடன், இருசக்கர வாகனத்தின் சாவியை பறித்துக்கொண்டு தகராறு செய்தனர். இதன் பின்னர் லாரி டிரைவர், சிறுமியை வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அவர்களிடமிருந்த தப்பித்த சிறுமியும், அவரது ஆண் நண்பரும் நடந்தவை குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவர் மற்றும் அவரது கூட்டாளியை கைதுசெய்தனர். மற்றொருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.