Thursday, December 5, 2024
Google search engine
Homeவிளையாட்டுகுஜராத்: ஜவுளி தொழிற்சாலையில் தீ விபத்து

குஜராத்: ஜவுளி தொழிற்சாலையில் தீ விபத்து

குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள பிரபல ஜவுளி தொழிற்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அகமதாபாத் நகரின் நரோல் ஜிஐடிசியில் உள்ள மகாலட்சுமி பேப்ரிக்ஸ் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் தளத்தில் இருந்து, வெளியான பெரும் கருப்பு புகையால் வானத்தை இருள் சூழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான முதன்மைக் காரணம் ஷார்ட் சர்க்யூட் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை, இது குறித்து அங்கு உள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments