2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் இயக்குனர் பா.ரஞ்சித். அதைத்தொடர்ந்து கார்த்தில் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் கார்த்தி மற்றும் பா ரஞ்சித்திற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அதற்கடுத்து 2016 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து கபாலி மற்றும் காலா ஆகிய மாபெரும் வெற்றி படங்களை உருவாக்கினார். 2021 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் சார்பாட்டா பரம்பரை நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது.
சில மாதங்களுக்கு முன் சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் இந்திய முழுவதும் பேசப்பட்ட திரைப்படமாக அமைந்தது. இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், பிரதிபலிப்பாகவும் இருக்கும்.
இந்நிலையில் இன்று அவரது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளுக்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் பா ரஞ்சித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் அன்பு இளவல் பா ரஞ்சித் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என பதிவிட்டுள்ளார்.