சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படக்குழு எதிர்ப்பார்த்த அளவு வசூலை பெறவில்லை கங்குவா திரைப்படம்.
இதை தொடர்ந்து சூர்யா அடுத்த திரைப்படமான சூர்யாவின் 45-வது படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யாவின் 45-வது திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஆர்.ஜே.வாக இருந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் சூர்யா 45-ன் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது. படத்தில் லப்பர் பந்து புகழ் ஸ்வஸ்விகா நடிக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து படத்தின் ஒளிப்பதிவாளரை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஜிகே விஷ்ணு மேற்கொள்கிறார். இவர் இதற்கு முன் மெர்சல், பிகில், ஜவான், கில்லாடி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவார்.