Thursday, December 12, 2024
Google search engine
Homeஇந்தியாமணிப்பூரில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம்

மணிப்பூரில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம்

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைத்தேயி, பழங்குடியினர்களான குகி மக்களுக்கும் இடையே இனக்கலவரம் ஏற்பட்டது. இதில் 250க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்

சமீபகாலமாக வன்முறை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த மாதம் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மீண்டும் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதனிடையே ஜிரிபாம் உள்பட பதற்றம் நிறைந்த 6 பகுதிகளில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு அண்மையில் அமல்படுத்தியது.

இந்த சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்தவொரு இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தவும், எந்தவொரு தனிநபரை கைது செய்யவும், தேவை ஏற்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் மணிப்பூரில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் 1958 நீக்கக் கோரியும், தீவிரவாதிகள் என்ற பெயரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் இம்பாலில் பேரணி நடத்தினர். இதில் பெண்கள், மாணவர்கள் பெரும்பாலன அளவில் கலந்து கொண்டனர். டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நடந்த இந்தப் பேரணியில் ஈடுபட்டவர்கள், மாநிலத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

இம்பாலின் தாவ் திடல் பகுதியில் இருந்து குமான் லாம்பாக் திடல் பகுதி வரை 5 கி.மீ. தூரத்துக்கு மக்கள் ஊர்வலமாக சென்றனர். ‘மணிப்பூரை அழிக்காதே’, ‘மணிப்பூரைக் காப்பாற்று’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments