வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், வங்காளதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4வது நடுவருக்கு எதிராக தவறாக பேசியதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஜாரி ஜோசப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக அல்ஜாரி ஜோசப்-க்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.