Thursday, December 12, 2024
Google search engine
Homeவிளையாட்டு3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் – வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் , இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு7 மணிக்கு போட்டி தொடங்குகிறது . இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் தீவிரம் காட்டும் . அதேவேளையில் ஆறுதல் வெற்றி பெற வங்காளதேசம் அணி போராடும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments