Tuesday, December 24, 2024
Google search engine
Homeசினிமாசண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தின் டிரெய்லர் வெளியீடு

சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தின் டிரெய்லர் வெளியீடு

மறைந்த விஜய்காந்தின் மகனாவார் சண்முக பாண்டியன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் படை தலைவன் நடித்துள்ளார்.

“வால்டர்”, “ரேக்ளா” படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பாடலான உன் முகத்தை பார்க்கலையே பாடலின் லிரிக் வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியானது.

படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். ஆக்சன் நிறைந்த காட்சிகளாக அமைந்துள்ளது படத்தின் டிரெய்லர். வேலு என்ற யானையை வளர்க்கிறார் கதாநாயகன். டிரெய்லர் முடிவில் மறைந்த விஜயகாந்தின் கண்கள் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் காட்சிபடுத்தியுள்ளனர். திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக்வுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments