2012 அம ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படம் வெளியானது.
இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்நிலையில், இன்றுடன் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவடைந்ததை ஒட்டி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்த போது எடுத்த புகைப்படங்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் இசை எனக்காவும், நமக்காகவும், இந்த மொத்த உலகத்துக்காகவும் இளையராஜா கொடுத்த அன்பின் வெளிப்பாடு!” என்று கவுதம் வாசுதேவ் மேனன் பதிவிட்டுள்ளார்.