ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து தலைநகர் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர், உளவுத்துறை தலைவர், ராணுவ தலைமை தளபதி, ஜம்மு – காஷ்மீர் டிஜிபி, மத்திய காவல் ஆயுதப்படை தலைவர் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது, பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி பூஜியம் சகிப்புத்தன்மையை கொண்டுள்ளார். பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் இலக்கை விரைவில் அடைவோம். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து வளங்களும் பயன்படுத்தப்படும். சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசதவீதம் அதிகரிப்பு ஜனநாயம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது’ என்றார்.