ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், 1-0 என ஆப்கானிஸ்தான் தொடரில் முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும், டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
டெஸ்ட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரின் ஆட்டங்களும் புலவாயோவில் நடக்கிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணி விவரம்:
கிரேக் எர்வின் (கேப்டன்), பென் கர்ரன், பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், டகுட்ஸ்வா சட்டைரா, ஜாய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, தடிவானாஷே மருமானி, பிராண்டன் மவுடா, நியாஷா மாயவோ, ப்ளெஸிங் முசரபானி, டையன் மையர்ஸ், ரிச்சர்ட் ங்வாரா, நியூமேன் நியாம்ஹூரி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ்.