Monday, March 17, 2025
Google search engine
Homeஇந்தியாபொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்

பொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சென்னையில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லூரிகள் படிப்பவர்கள் பொங்கல் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களில் கொண்டாட படையெடுத்துச் செல்கின்றனர்.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், கடந்த 3 தினங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்கள், ரெயில்கள் மற்றும் விமானங்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். மக்கள் பயணத்திற்காக தமிழ்நாடு அரசும் சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது, ரெயில்களில் அனைத்து டிக்கெட் முன்பதிவுகளும் நிரம்பி விட்டதால், அரசு பஸ்களில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் சிறப்பு பஸ்களில் கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை தனது எக்ஸ் வலைதளத்தில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (12.01.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில், 2,092 பஸ்களும், 1,858 சிறப்பு பஸ்களும் ஆக 3,950 பஸ்களில் 2,17,250 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர்” என்று அதில் பதிவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments