Monday, February 3, 2025
Google search engine
Homeஉலகம்லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் பலி; 83 பேர் காயம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் பலி; 83 பேர் காயம்

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. லெபனானின் பல பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

இந்த நிலையில், லெபனான் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், லெபனானில் சில இடங்களை இஸ்ரேல் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இந்த விவரம் பற்றி சரிவர தெரியாமல், லெபனான் குடிமக்கள் அந்த நகரங்களுக்குள் நுழைய முயன்றனர். அப்போது, இஸ்ரேல் ராணுவம் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 3 பெண்கள், லெபனான் வீரர் ஒருவர் என 15 பேர் மரணம் அடைந்தனர். 83 பேர் காயம் அடைந்தனர் என தெரிவித்து உள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments