அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பைட் கிளப்’ (Fight Club). இந்த படத்தில் ‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளி கிழமை (டிசம்பர் 15) வெளியான பைட் கிளப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், பைட் கிளப் படத்தின் ராவண மவன் பாடலின் வீடியோ படக்குழு வெளியிட்டு உள்ளது. கடந்த வெள்ளி கிழமை வெளியான பைட் கிளப் திரைப்படம் ரூ. 5 கோடியே 75 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது.