நெல்லை மாவட்டத்தில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. புலிகள் காப்பகம், பறவைகள் சரணாலயம், சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறை அதிகாரிகளுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் கொக்கு, நாரை, வேட்டை பறவைகள் உள்ளிட்ட 320-க்கும் மேற்பட்ட பறவை வகைகள் காணப்பட்டதாக கணக்கெடுப்பு பணியாளர்கள் தெரிவித்தனர்.