நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், DD3மற்றும் 24.12.23 என்ற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் கடற்கரையில் காலியாக இருக்கும் பென்ச்-இன் புகைப்படம் உள்ளது.
இவைதவிர படம் தொடர்பாக வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த இதர தகவல்கள் டிசம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
பா பாண்டி படத்தின் மூலம் 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ். தற்போது நடிகர் தனுஷ், தான் நடிக்கும் 50-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் சர்ப்ரைசாக வெளியிடப்பட்டு இருக்கிறது.