Saturday, April 5, 2025
Google search engine
Homeசினிமாமோனாலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தந்த இயக்குநர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது

மோனாலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தந்த இயக்குநர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடத்தி ஜனவரி முதல் பிப்ரவரி இறுதி வரை மகா கும்பமேளா நடைபெற்றது. இந்துக்களின் மிகப்பெரிய ஒன்றுகூடலான இதில் 60 கோடி பக்தர்கள் பங்கேற்றதாக அம்மாநில அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கும்பமேளாவில் பாசிமணி விற்ற மோனாலிசா போஷ்லே என்ற 17 வயது பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் டிரண்ட் ஆகின. ஒரே இரவில் இந்தியா முழுவதிலும் மோனாலிசா பிரபலம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு மோனலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்தது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். டைரீஸ் ஆஃப் மணிப்பூர் என்ற அந்த படத்திற்காக மோனாலிசாவிக்கு ரூ.21 லட்சம் சம்பளமும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்த கைது நடந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிறிய ஊர் ஒன்றில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு காதாநாயகி ஆக்குகிறேன் என ஆசைகாட்டி இயக்குநர் மனோஜ் மிஸ்ரா (45 வயது) பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு.

திருமணமான சனோஜ் மிஸ்ரா தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மும்பையில் வசிப்பவர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை 2020 ஆம் ஆண்டு டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் சனோஜ் மிஸ்ரா சந்தித்தார். படத்தில் வாய்ப்புகள் தருவதாக அவருக்கு ஆசை காட்டியுள்ளார். 2021 ஜூன் மாதம் அப்பெண்ணை ஜான்சி ரெயில் நிலையத்துக்கு இயக்குநர் அழைத்துள்ளார்.

சமூக அழுத்தத்தை காரணம் காட்டி அப்பெண் வர மறுக்கவே தான் தற்கொலை செய்துகொள்வேன் என பெண்ணிடம் இயக்குநர் கூறியிருக்கிறார். இதனால் அப்பெண் ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து அப்பெண்ணை ரிஸார்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதை படம் பிடித்து வைத்து அப்பெண்ணை மிரட்டி, அதன் பின்னும் தான் சொல்லும் இடங்களுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். மேலும் அவரை திருணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மும்பைக்கு அழைத்துச் சென்று லிவ் இன் உறவில் வாழ நிர்ப்பந்தித்துள்ளார். இந்த காலகட்டத்தில் மூன்று முறை அப்பெண்ணை கட்டாய கருக்கலைப்புக்கும் உட்படுத்தி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் (மோனாலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்த பின்னர்) அப்பெண்ணை கைவிட்டுள்ளார். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் அந்தரங்க படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சனோஜ் மிஸ்ரா அளித்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments