பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கும், அளப்பரிய சாதனைகள் செய்தவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ போன்ற பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2026-ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி வழங்கப்பட வேண்டிய பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. மற்றவர்களுக்காக பரிந்துரைகளும் அனுப்பலாம்.
ராஷ்டிரீய புரஸ்கார் வலைத்தளத்தில் உள்ள படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, 800 வார்த்தைகளுக்கு மிகாமல் பாராட்டு பத்திரமும் எழுதி, ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஜூலை 31-ந் தேதி என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.