அண்மையில் திருமண பந்தத்திலிருந்து பிரிந்த மனைவி மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுடன் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விடுமுறையை கழிப்பதற்காக ஜமெய்க்கா விஜயம் செய்ய உள்ளார்.
முன்னாள் மனைவி சோபி கிரகரி ட்ரூ மற்றும் பிள்ளைகளுடன் எதிர்வரும் 26ம் திகதி முதல் ஜனவரி மாதம் 4ம் திகதி வரையில் ஜமெய்க்காவில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டிலும் பிரதமரும் அவரது குடும்பத்தினரும் ஜமெய்க்காவிற்கு விஜயம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் பயணக் கட்டணங்கள் உள்ளிட்ட இந்த விடுமுறை பயணத்திற்கான செலவுகளை அரசாங்கத்திற்கு பிரதமர் குடும்பம் மீள செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த கோடை விடுமுறையின் போது பிரதமர் ட்ரூடோ குடும்பம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் விடுமுறையைக் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.