காங்கிரஸ் கட்சியின் 139-வது ஆண்டு நிறுவன நாள் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் சார்பில் இன்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள திக்கோரி பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
‘ஹேன் தயார் ஹம்’ (நாங்கள் தயார்) என நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்கள். பொதுக்கூட்டத்தில் கட்சி தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் நிறுவன நாள் பொதுக்கூட்டம் இன்று நடப்பது அரசியல் களத்தில் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.