கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடிபோதையினால் ஏற்பட்ட வாகன விபத்துச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மது போதையில் வாகனம் செலுத்தியதனால் பதிவான விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 என தெரிவிக்கப்படுகின்றது.
19 ஆண்டுகளின் பின்னர் இந்த ஆண்டில் வாகன விபத்துக்களினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரையில் மாகாணத்தில் 400 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பிலான பத்தாயிரம் சம்பவங்கள் பற்றி பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவங்களின் எண்ணிக்கை 16 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.