Monday, September 16, 2024
Google search engine
Homeவிளையாட்டுபெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்..!

பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்..!

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும், அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இந்தியாவும் ஆட உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments