Friday, March 14, 2025
Google search engine
Homeஇந்தியாவிஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்த தேமுதிக நிர்வாகி அதிர்ச்சியில் உயிரிழப்பு

விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்த தேமுதிக நிர்வாகி அதிர்ச்சியில் உயிரிழப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், தேமுதிகவினர், ரசிகர்கள் நேரில் சென்று விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தேமுதிக கிளை செயலாளர் விஜயகுமார்(வயது 41) சென்னைக்கு சென்று, விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சொந்த ஊருக்கு வந்தார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை, விஜயகுமார் தனது வீட்டில் இருந்து, டி.வி.யில் பார்த்தார்.

விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்து அழுதுகொண்டிருந்த விஜயகுமார் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விஜயகுமாரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு விஜயகுமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் எற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது தலைவர் விஜயகாந்தின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த விஜயகுமார், மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவித்தனர்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments