மாலம்பே, கஹந்தோட்டை பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த பெண் 35 வயதுடையவர் எனவும், உயிரிழந்த மூன்று பிள்ளைகளில் இரண்டு சிறுவர்களும் ஒரு சிறுமியும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுவர்களில் இருவர் 09 மற்றும் 10 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.