கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், பொது இடங்களில் போதைப் பொருள் பயன்படுத்துவதனை தடுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை நீதிமன்றம் தடுத்துள்ளது.
பொது இடங்களில் சட்டவிரோதமான போதை மருந்துகளை பயன்படுத்துவதனை தடுக்கும் நோக்கில் மாகாண அரசாங்கம் சட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
எனினும் இந்த சட்டம் அமுலாவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றின் இந்த நடவடிக்கை குறித்து மாகாண அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.