இலங்கை பொலிஸாருக்கு உதவிகள் வழங்கப்படும் என கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
நிசான் துரையப்பாக ஒர் இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் புதல்வரே இந்த நிசான் துரையப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிசான், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரை சந்தித்துள்ளார்.
நிசான் துரையப்பாவிற்கு பொலிஸார் விசேட மரியாதை அணிவகுப்பு ஒன்றை நடத்தி வரவேற்றுள்ளனர்.
இலங்கையின் அபிவிருத்திக்கு கனடிய மக்களின் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மத்தியஸ்தம் வகிக்கப் போவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.