புத்தாண்டில் கனடாவில் குடும்பம் ஒன்றின் சராசரி செலவு 700 டொலர்களினால் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிலும் நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் உயர்வடையும் என கூறப்படுகின்றது.
கனடாவின் வருடாந்த உணவு விலை அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் 2.5 வீதம் முதல் 4.5 வீதம் வரையில் உயர்வடையும். பேக்கரி உற்பத்திகள், இறைச்சி வகைகள் மற்றும் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் உணவுப் பொருள் செலவுகள் சராசரியாக 700 டொலர்களினால் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.