Sunday, December 22, 2024
Google search engine
Homeவிளையாட்டு13-வது தேசிய சீனியர் ஆக்கி: 6-ம் நாள் முடிவுகள்...

13-வது தேசிய சீனியர் ஆக்கி: 6-ம் நாள் முடிவுகள்…

13-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 6-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சத்தீஷ்கார் அணி 11-3 என்ற கோல் கணக்கில் குஜராத்தை தோற்கடித்தது.

மற்ற ஆட்டங்களில் டாமன் டையூ 7-1 என்ற கோல் கணக்கில் பீகாரையும், பெங்கால் 10-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு காஷ்மீரையும், ஜார்கண்ட் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டிகாரையும், தெலுங்கானா 15-0 என்ற கோல் கணக்கில் அருணாசல பிரதேசத்தையும் தோற்கடித்தன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments