கனடாவின் ஒன்றாரியோ மகாணத்தின் பிரம்ரன் நகரில் பொலிஸ் அவசர அழைப்பு சேவைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
911 என்னும் அவசர அழைப்பு சேவையை பிழையாக பயன்படுத்துவோர் தண்டிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பிரம்ரன் நகர மேயர் பெட்ரிக்; பிறவுண் எச்சரித்துள்ளார்.
பிரம்ரட்னில் 911 என்னும் பொலிஸ் அவசர அழைப்பு எண்ணுக்கு அதிகளவில் அழைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவற்றில் பல அழைப்புக்கள் தவறான நோக்கத்தைக் கொண்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அவசர அழைப்பு சேவைக்கு கிடைக்கப்பெறும் 40 சதவீதமான அழைப்புக்கள் அத்தியாவசியமானவை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த ஆண்டில் அவசர சேவைக்கு கிடைக்கப் பெற்ற அழைப்புக்களின் எண்ணிக்கை 23 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.