ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் நீண்ட காலம் கழித்து இருவரும் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர்.
ஆனால் இந்த அணியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்திற்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.