Monday, December 23, 2024
Google search engine
Homeவிளையாட்டுஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் மற்றும் சத்ரன் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் அடித்த நிலையில் குர்பாஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே சத்ரன் 25 ரன்கள் அடித்த நிலையில் ஷிவம் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் முகமது நபி மட்டுமே சிறப்பாக விளையாடினார். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பின்னர் இந்திய அணியின் பிளேயிங் 11-ஐ ரோகித் சர்மா அறிவிக்கும்போது அதில் ஜெய்ஸ்வால் பெயர் இடம்பெறவில்லை. கோலி இல்லாத சுழலில் ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராகவும், கோலி இடத்தில் கில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முதல் டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் காயம் காரணமாகதான் அணியில் இடம்பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

 

Previous articleபிரதமர் நரேந்திரே மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு நாட்டின் மந்திரிகள் 3 பேர் மிகவும் கீழ்தரமாக விமர்சித்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, அவதூறு கருத்து தெரிவித்த மந்திரிகள் 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். நேற்று முன்தினம் சீனாவின் புஜியான் மாகாணத்தில் நடைபெற்ற மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டு பேசிய முகமது முய்சு, சீனாவை மாலத்தீவின் நெருங்கிய நட்பு நாடு என்று கூறியதுடன், தங்கள் நாட்டுக்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீன அரசுக்கு கோரிக்கையும் வைத்தார். இந்த நிலையில் நேற்று அவர் பீஜிங்கில் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை விரிவான கூட்டாண்மைக்கு உயர்த்துவதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையிலான 20 முக்கிய ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.
Next articleசச்சின், சேவாக் இல்லை… பவுலிங் போட விரும்பாத இந்திய வீரர் இவர்தான் – இங்கிலாந்து முன்னாள் வீரர் ஓபன் டாக்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments