உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் வரும் 22-ந்தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்தப்படும் நாளில், பாஜக ஆளும் சில மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உத்தரபிரதேசத்தை தொடர்ந்து சத்தீஸ்கர் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் வருகிற 22-ந்தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரிகள் அறிவித்துள்ளனர்.